Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி மேடையில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது,
பாரதியை புரட்சியாளர், சுதந்திர போராட்ட வீரர் என்று நமக்கு தெரியும், ஆனால் அவர் இந்திய மொழிகளுக்கு பங்காற்றியுள்ளார்.பாரதிய மொழிகளை ஆங்கிலேயர்கள் மொழிகளாகவே கருதவில்லை.இதற்கு எதிராக புரட்சி செய்தவர் மகாகவி பாரதியார்.
மகாகவி பாரதி எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழி ஆங்கில மொழியை விட இலக்கியத்தில் பழமையானது என்று சொன்னவர்.நான் தற்போது தமிழை வாசிப்பதற்கு கற்றுக்கொண்டு இருக்கிறேன். தினமும் செய்தித்தாள்களை வாசிக்கிறேன், அதில் பல வார்த்தைகளை நான் ஏற்கனவே தெரிந்திருக்கிறேன்.
ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தண்ணீர் சுவை மாறுகிறது, அதைப்போல் மொழிகளும் மாறுகிறது.கன்னியாகுமரி தமிழும் சென்னை தமிழும் ஒன்றாக இருப்பதில்லை, கொங்கு தமிழை போல் டெல்டா தமிழ் இருப்பதில்லை.
பாரதம் முழுவதும் பல நிறுவனங்களை நமது முன்னோர்கள் நிறுவினார்கள். அவை எல்லாம் பாரதத்திற்கானது.பாரதத்தில் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு ராமாயண கதை இருக்கும்.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கு மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை, அனைவரும் ஒற்றுமையாக நின்றனர்.மக்களின் மனதில் இருந்து, ராமர் மற்றும் கிருஷ்ணரை எப்படி வெளியேற்ற முடியும்?.. கோவில்களை வேண்டுமானால் இடிக்கலாம் ஆனால் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. இந்தியாவில் பாடல்கள் மற்றும் கவிதைகள் பல மொழிகளில் இருக்கின்றன.
ஆனால் பாரதத்தின் ஒற்றுமைக்கும் நமது அடையாளத்தை ஊடுறுபவர்களிடம் இருந்து பாரதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.தேச விடுதலை போராட்டதின் போது தமிழகத்தில் பல தலைவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள். ஆங்கிலம் பேசுவது தான் சிறந்தது என நம்மிடம் ஆங்கிலேயர்கள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டனர்.
சிந்தனை ஒன்றுடையாள் செப்பு மொழி பதினெட்டுடையாள் என இந்தியாவில் பன்முகத் தன்மை கொண்ட மொழிகள் இருந்தாலும் நம்முடைய சிந்தனை ஒன்றாக இருந்தது. பழங்குடி மக்களிடம் கூட கம்பராமாயணமும் மகாபாரத கதைகளும் சென்றடைந்தது வியப்பாக இருக்கிறது. ஒரே சிந்தனை தான் ஆனால் பல்வேறு வடிவங்களில் பல்வேறு மொழிகளில் நம்மிடம் வேறு ஒன்றி இருந்தது.
ராமராஜ்யம் என்ற வார்த்தையை மகாத்மா காந்தி பயன்படுத்தினார்.தமிழ் மக்களின் இதயத்துடிப்பை கம்பராமாயணம் பிரதிபலித்திருக்கும்.ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் கூட, நமது திசையை மறந்து ஆங்கிலேயர்கள் எதை முடிக்காமல் விட்டு சென்றார்களா அதையே நாம் பின்பற்றி வருகிறோம். அவர்கள் நமது மொழிகளை ஒடுக்கினார்கள்.
இந்தியாவின் சிறப்பு பன்முகத் தன்மை தான் ஆனால் அதை வேற்றுமை என தவறாக சொல்லுகிறார்கள். உலகில் உள்ள எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் நமது பாரத மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியை கற்றுக் கொள்வதற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்திக் கொள்ள கூடாது.
1967-ல் சத்தியமே ஜெயதே என்ற வார்த்தைக்கு பதிலாக வாய்மையே வெல்லும் என தமிழில் மாற்றினார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும் அதன் அர்த்தம் என்னவென்று.
தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று நான் சொல்லும் போது தினம் என்பது தமிழ் வார்த்தை அல்ல நாள் என்பதுதான் தமிழ் வார்த்தை என்று சொன்னார்கள். ஆனால் தமிழகத்தில் நாம் தினமும் படிக்கும் செய்தித்தாள்களின் பெயர் தினமலர்,தினகரன், தினத்தந்தி.
மொழிகள் காலத்திற்கு ஏற்ற வகையில் பிற மொழிகளை உறிஞ்சிக் கொண்டு வளரும்.
அரசியல் சுரண்டலுக்காக மொழியில் பிற மொழி வார்த்தைகள் கூடாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. காலத்திற்கு ஏற்ப மொழிகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இளைய தலைமுறையினர் அதனை புரிந்து கொள்வது கடினமாகிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ