Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 11 டிசம்பர் (ஹி.ச.)
ககன்யான் விண்கலத்தை 2027இல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் நாரயணன் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் ஐந்து தொகுதிகளாக உருவாக்கப்படும் முதல் தொகுதி 2028-ல் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023ல் பிரதமர் அடிக்கல் நாட்டிய இத்திட்டம் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக உருவாகிறது. இது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்த முக்கிய மையமாகும். இந்த ஏவுதளம் 2027 தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும்.
இது தமிழகத்துகானதாக அல்லாமல் இந்தியாவுக்கான பெருமை.
சந்திரயான்-4 திட்டம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடைபெறுகிறது. என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam