Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை
மற்றும் மதுரையில் நடை
பெற்றது.
தொடரின் கடைசி நாளான நேற்று(டிச 10) சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, ஸ்பெயின் அணியை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஜூனியர் ஹாக்கிஉலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (டிச 11) கூறியிருப்பதாவது,
ஜூனியர் ஹாக்கிஉலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு பாராட்டுகள். கடுமையாக போராடிய ஸ்பெயின் அணிக்கும் பெரிய கைதட்டலை உரித்தாக்குகிறேன். முழு ஆற்றலை வெளிப்படுத்தி போராடிய இந்தியா, அர்ஜென்டினா அணிகளும் நம் மதிப்பினை வென்றுள்ளன.
தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை பன்னாட்டளவில் தனது திறனையும், உலகத்தரத்திலான தொடர் நடத்துவதையும், இனிய விருந்தோம்பலையும், விளையாட்டுத் துறையில் உயர்வினை ஊக்குவிக்கும் சிறந்த சூழலையும் நிரூபித்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b