Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 டிசம்பர் (ஹி.ச.)
கேரளாவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிஜிட்டல் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தர்களாக நியமிக்க இரு நபர்களை இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை வேந்தர்களை நியமிக்க மறுக்கும் கேரளா ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குநீதிபதி ஜெ.பி.பார்திவாலா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தேடுதல் குழு பரிந்துரைத்த நபர்களில் ஒருவரை தவிர பிற எந்த நபரை தேர்ந்தெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சியபனை இல்லை என்றும், நாங்கள் ஆட்சபனை தெரிவித்த நபர் தற்போது தற்காலிக துணைவேந்தராக இருக்கிறார் அவரால் பல வேலைகள் தொடர்ச்சியாக தடைப்பட்டு வருகின்றன.
எனவே அவரை நியமிப்பதற்கு மட்டும் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம் என்றும் கேரளா அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் பல்கலைகழகவேந்தரை பொறுத்த வரைக்கும் அந்த நபரையே மீண்டும் துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்ற இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி துலியா தலைமையிலான குழு தங்களது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. அதேவேளையில் துணைவேந்தர் நியமன விவகாரத்தில் எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தும், இன்று வரை முட்டுக்கட்டை நீடிக்கிறது என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேந்தரும் முதலமைச்சரும் ஒருமித்த கருத்தை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே சில கடித போக குவரத்தை தவிர வேறு எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இரண்டு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வேந்தரும் முதலமைச்சரும் எந்த ஒருமித்த கருத்தையும் எட்ட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு,துணைவேந்தர் பெயர்களை பரிந்துரைக்க நியமனம் செய்யப்பட்ட நீதிபதி துலியா தலைமையிலான குழுவானது கேரளா முதல்வரின் கடிதத்தையும், ஆளுநரின் (பல்கலைகழகவேந்தர்) பதிலையும் ஆராய்ந்து, அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிஜிட்டல் பல்கலைகழகத்துக்கு என தலா ஒரு பெயரை இறுதி செய்து 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்.
முத்திரையிடப்பட்ட கவரில் அதனை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam