Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக பரமக்குடி மாவட்ட தலைவர் சேக்அப்துல்லா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பரமக்குடி SPM தியேட்டர் சாலையில் உள்ள மதுபான கடையுடன் சேர்ந்த பார் மற்றும் லக்கி என்ற பெயரில் தனியார் குளிர்சாதன வசதி கொண்ட பார் செயல்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதி நகர் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையில் மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதியில் இருப்பதாலும் பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லக்கூடிய சாலையாக இருப்பதாலும் இது மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு உள்ள சூழலில் மதுபான விடுதியில் குடித்துவிட்டு சிலர் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பெண்கள் மாணவிகள் செல்ல இந்த அச்சம் ஏற்படுகிறது எனவே கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி பல போரட்டங்கள் நடத்தியும் அகற்றாததால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் பரமக்குடி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் தமுமுக மாவட்ட தலைவர் சேக்அப்துல்லா, முகம்மது இலியாஸ், உள்ளிட்ட 95 நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுபான கடையால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது என்று ஜனநாயக முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம் எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் போராட்டம் நடத்தியவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவே இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய தேவை இல்லை எனக் கூறி 95 நபர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN