Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற SIR கணக்கெடுப்பு பணிகளில் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்றரை இலட்சம் வாக்காளர்கள் இறந்து உள்ளதாகவும், இரண்டரை லட்சம் வாக்காளர்கள் இரட்டை வாக்குகள், வீடு மாற்றம் மற்றும் SIR விண்ணப்பங்கள் சமர்பிக்கவில்லை.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடும் பொழுது மதுரை மாவட்டத்தில் வாக்காளர்கள் எவ்வளவு பேர் நீக்கப்பட்டனர் என துல்லியமாக தெரிய வரும்.
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி இந்தியாவில் 12 மாநிலங்களில் SIR கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளது.
2002 & 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் நடைபெற்றதற்கு பின்னர் தற்போது 2025 ல் SIR பணிகள் நடைபெற்றது.
2006, 2009, 2011, 2014, 2016, 2019, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN