சைதாப்பேட்டையை சுற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றுச் சூழல் பூங்கா, மேம்பாலம், உலகத்தரத்தில் குழந்தைகள் மருத்துவமனை வரவுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச) சைதாப்பேட்டை வெங்கடாபுரம் பகுதியில், தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு பகுதிகளை ரூ.2.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை துவங்கி வைக்கும் நிகழ்வு இன்று சைதாபேட்டை வெங்கடாபுரத்தில் நடைபெற்றது. இ
Masu


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச)

சைதாப்பேட்டை வெங்கடாபுரம் பகுதியில், தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு பகுதிகளை ரூ.2.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை துவங்கி வைக்கும் நிகழ்வு இன்று சைதாபேட்டை வெங்கடாபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்.,

சைதாப்பேட்டையில் 1800 வீடுகள், கோட்டூர்புரத்திலும் 522 வீடுகளும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

2322 வீடுகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

வெங்கடாபுரத்தில் 836 குடியிருப்புகள் பழமையானவைகளை சீரமைக்கும் பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 2கோடி 59 லட்சம் பணிகளில் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது.

வெங்கடாபுரம் கிராமத்தை ஒட்டி தான் முதல்வர் தெரிவித்தப்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ளது.

ரேஸ் கோர்ஸில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

வேளச்சேரி மற்றும் சர்தார் பட்டேல் சாலையை சந்திக்கும் இடத்திலிருந்து மேம்பாலம் கட்டப்படுகிறது. 3.22 கிமீ தூரம் கொண்ட மேம்பாலம் ரூ. 320 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்படுகிறது. அதே மேம்பாலத்தில் தான் மெட்ரோவும் வர உள்ளது.

அதே போல வெங்கடாபுரத்தை ஒட்டி தான் சர்தார் பட்டேல் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் 58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.

சைதாப்பேட்டையில் ரூ. 621 கோடி செலவில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.

சைதாப்பேட்டையில் குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனை 480 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

எம்.சி ராஜா விடுதி பழமையான கட்டிடம், தற்போது மிகப்பெரிய அளவில் நடசத்திர அந்தஸ்தடன் கட்டப்பட்டுள்ளது. உணவு தரமாக இல்லை என புகார் வந்துள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது.

அது உடனே சரிசெய்யப்படும். அடிப்படை வசதி இல்லை என கூறுகிறார்கள்.

அந்த கட்டடத்தை புகைப்படம் எடுத்து பாருங்கள். எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ