பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின - பிரதமர் மோடி
புதுடெல்லி, 11 டிசம்பர் (ஹி.ச.) மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாகவும், சிந்தனைகள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு
மோடி


புதுடெல்லி, 11 டிசம்பர் (ஹி.ச.)

மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாகவும், சிந்தனைகள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் பாரதியைப் புகழ்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதில்,

அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார்.

நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.

தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை. என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam