Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனால் அரசியல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்படைந்துள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை எல்லாம் திரைக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிச 11) சந்தித்து பேசினார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்
அ இஅதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன்.
இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் திரு. ஜெயபிரகாஷ் அவர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b