Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச)
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார், இன்று (11.12.2025) தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி. செல்வகுமார் தன்னுடைய ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உடன் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமார் நடிகர் விஜய்யின் புலி திரைப்படத்தின் தயாரிப்பாளரார் ஆவார். இவர் நடிகர் விஜய்யோடு பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர். இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக செல்வக்குமார் விருகம்பாக்கத்தில் ஹோட்டல் ஒன்றைத் திறக்கும் போது அந்த திறப்பு விழாவிற்கு நடிகர் விஜய் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பல்வேறு படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக செல்வகுமார் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b