ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை தனுர்மாத பூஜை
ராமநாதபுரம், 11 டிசம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிக பழைமை வாய்ந்த ராமநாதசுவாமி கோயிலில் டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.16 முதல் ஜன.14ம் தேதி  தனுர்மாத பூஜை


ராமநாதபுரம், 11 டிசம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிக பழைமை வாய்ந்த ராமநாதசுவாமி கோயிலில் டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், தனுர்மாத பூஜையை முன்னிட்டு வருகிற விசுவாவசு வருடம், மார்கழி மாதம் 1ம் தேதி 16.12.2025 செவ்வாய் முதல் 14.01.2026 ஆம் தேதி வரை தனுர்மாத பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 3.30 மணிக்குதிறக்கப்படும்.

தனுர்மாத பூஜை நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

அதிகாலை 3.30 மணிக்கு திருக்கோயில் நடை திறப்பு

அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெறும்.

காலை 5.00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடைபெறும்

அதிகாலை காலை 6.00 மணிக்கு திருவனந்தல் பூஜை

காலை 7.30 மணிக்கு விளா பூஜை

காலை 10.00 மணிக்கு கால சந்தி பூஜை

பகல் 12.00 மணிக்கு உச்சி கால பூஜை

நண்பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3.00 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும்.

மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜை

இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை

இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.

உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காலங்களில் மேற்சொன்ன பூஜை நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b