எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா உள்ளிட்ட 12 மாநிலங்கள்
எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமல்லாது, பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற திருத்த முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி இன்றுடன் (டிச 11) எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க காலக்கெடு முடிவடைந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிடுவதற்கான அவகாசம் மேலும் 3 நாட்களுக்கு

(டிசம்பர் 14) நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான்-நிக்கோபாரில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

'எஸ்.ஐ.ஆர்' படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) ஒப்படைக்கும் பணியில் நிலவும் சவால்கள் மற்றும் கால அவகாசம் போதாது என்ற கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b