Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 11 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடியை ஏற்றக்கோரி பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக 14 பேர் ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் மலை உச்சியில் முருகன் கோடியான சேவல் கொடியை மலை உச்சியில் ஏற்றி முருக பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக வழி செய்யுமாறும்,
முருகனுக்கு சொந்தமான மலையில் மற்றொருவர்கள் ஆக்கிரமிக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும்.
கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் நிர்வாகமே அதில் அரசியல் செய்யக்கூடாது என்றும்.
மலையையும் கோவிலையும் பாதுகாப்பதற்கு ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்து சமயஅறநிலை துறை சார்பில் நீங்கள் செய்யத் தவறும் பட்சத்தில் முருக பக்தர்கள் ஒன்றிணைந்து நாங்களே பணிகளை செய்து விடுவோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
Hindusthan Samachar / Durai.J