Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 11 டிசம்பர் (ஹி.ச.)
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது,
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை தேவைப்பட்டால் அதைப் பெரிதாக எடுத்துச் செல்வோம். இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, அது அங்கேயே தீர்க்கப்படட்டும் என நம்புகிறேன். தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளனர். அதுவே இந்த விவகாரத்தில் தீர்வை எட்டப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் இந்து அமைப்புகளும் இந்த விவகாரத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் எதாவது நடவடிக்கை தேவை என்றால் அவர்கள் எங்கள் கவனத்திற்கு அதைக் கொண்டு வருவார்கள். பின்னர் நாங்கள் அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.
தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தைத் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் பலத்தின் அடிப்படையில் இங்கேயே தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இப்போதைக்கு இதை நாம் தேசிய அளவில் கொண்டு செல்லத் தேவையில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த விவகாரம் இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b