திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் கண்டித்து டிச 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி
மதுரை, 11 டிசம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு தரப்பில்
திருப்பரங்குன்றம் விவகாரம் - டிச 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி


மதுரை, 11 டிசம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணையில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இத்தைய சூழலில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் மக்கள் சார்பில், டிசம்பர் 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச 11) விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின் போது, 50 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அரசியல் பேசக்கூடாது என நிபந்தனை விதித்து, அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Hindusthan Samachar / vidya.b