தவெக தலைமை அலுவலகத்தில் பாமக பாலு..!
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தவ
பாலு


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தவிர்த்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அன்புமணி கடிதம் எழுதி உள்ளார்.

இந் நிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, மற்றும் கட்சி நிர்வாகிகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் விஜய், போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கடிதத்தை வழங்கி இருப்பதாகவும், அவர் நிச்சயமாக போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது முழு பொய் என்றும், அப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக முதலமைச்சர் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam