Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 11 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது.
பொருளாதார மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனி நபர் கடன், கிரேடிட் கார்டு கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம், சமீப மாதங்களில் சற்று குறைந்துள்ளது.
ஆனால் பெட் நிர்ணயித்த 2 சதவீதம் இலக்கு எட்டப்படவில்லை. அதனால் வட்டிக் குறைப்பில் இன்னும் எச்சரிக்கை தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்டி விகிதத்தை 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) குறைந்துள்ளதால், தற்போது 3.5% - 3.75% என்ற வரம்பில் இருக்கும். ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM