திருப்​பதியில் ஜனவரி மாத முக்கிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்​திற்​கான சிபாரிசு கடிதங்​கள் முற்​றி​லு​மாக ரத்து - திருப்​பதி தேவஸ்​தானம் அறிவிப்பு
திருமலை, 11 டிசம்பர் (ஹி.ச.) திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதற்​கான ஆன்​லைன் டிக்​கெ
திருப்​பதியில் ஜனவரி மாத முக்கிய நாட்களில் விஐபி பிரேக் தரிசனத்​திற்​கான சிபாரிசு கடிதங்​கள் முற்​றி​லு​மாக ரத்து - திருப்​பதி தேவஸ்​தானம் அறிவிப்பு


திருமலை, 11 டிசம்பர் (ஹி.ச.)

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட

உள்​ளனர்.

இதற்​கான ஆன்​லைன்

டிக்​கெட்​டு​கள் இணை​யத்​தில்

ஏற்​கெனவே வழங்​கப்​பட்டு

விட்​டன.

இந்​நிலை​யில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்​சனம், 29-ம் தேதி முதல் 8-ம்தேதி வரையிலும், மற்றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்​தமி போன்ற நாட்​களில் விஐபி பிரேக் தரிசனத்​திற்​கான சிபாரிசு கடிதங்​கள்

முற்​றி​லு​மாக ரத்து

செய்​யப்​படு​வ​தாக திருப்​பதி தேவஸ்​தானம்

அறி​வித்​துள்​ளது.

Hindusthan Samachar / JANAKI RAM