Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு வருபவர்களை கூட்டணியில் அரவணைப்போம் என தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜயின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 4 நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதாவது,
ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து விஜய் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam