Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 11 டிசம்பர் (ஹி.ச.)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் இன்று (டிச 11) நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியதாவது,
ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல்களை இயக்கும் சீனா, நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் இந்த கப்பல், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களையும், நிலையான எரிசக்தி மீதான நமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல, பசுமை ஆற்றல் மற்றும் உள்நாட்டுத் தீர்வுகளை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கான ஒரு அறிகுறி.
நமது தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதாகவும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதோடு, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் உள்நாட்டு நீர்வழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b