Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 11 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில், கடந்த மாதம் 24-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த, நாகியம்மாள் (60) என்பவரை புலி தாக்கிக் கொன்றது.
வனத்துறையினர் புலியைப் பிடிக்க, 3 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்த நிலையில், புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில், 3-ம் தேதி சிறுத்தை சிக்கியது. வன ஊழியர்கள் அதே பகுதியில், அதை விடுவித்தனர்.
கடந்த 8-ம் தேதி காலை, மாவனல்லா பகுதியில் கன்றுக் குட்டியை புலி தாக்கி இழுத்துச் சென்று கொன்றது.மேலும், செம்மனத்தம் சாலையை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்க முயற்சித்தது. அதனை பார்த்து மக்கள் சப்தமிட்டதால், புலி ஓடியது.மாடு சிறு காயங்களுடன் உயிர் தப்பியது.
மாவனல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் இன்று (டிச 11) அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்தப் புலி இழந்திருப்பதை உறுதி செய்தால் மாவனல்லாவில் பிடிக்கபட்ட புலி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b