மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வாக்காளர்கள் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலின்போது வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மி
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வாக்காளர்கள் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தேர்தலின்போது வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.) சரிபார்ப்பு பணி இன்று (டிச 11) தொடங்கியுள்ளது.

வரும் 24-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பணிகளின்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 1½ லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 1.30 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரந்திநிதிகள் பெயர் பெறப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b