ரஷ்யா - உக்ரைன் இடையில் நடக்கும் மோதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் - டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், 13 டிசம்பர் (ஹி.ச.) ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்
ரஷ்யா - உக்ரைன் இடையில் நடக்கும் மோதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் - டிரம்ப் எச்சரிக்கை


வாஷிங்டன், 13 டிசம்பர் (ஹி.ச.)

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்தப் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இருப்பினும் அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

இந்த மோதலில் உயிரிழப்புகளை தடுக்க விரும்புகிறோம். கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை நிறுத்த வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

மோதல் தொடர்ந்து நடந்தால், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும். இதனை முன்னரே கூறியிருந்தேன். அனைவரும் இது போன்று நடந்தால் மூன்றாம் உலகப்போரைத் தவிர வேறு வழியில்லை. இதனை பார்க்க யாரும் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டிரம்ப் விரக்தியடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் மெதுவாக செயல்படுவதால் அதிபர் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார். வெறும் சந்திப்புக்காக மட்டும் கூட்டம் நடப்பதை அவர் விரும்பவில்லை. ஒரு முடிவும் எடுக்க முடியாத சந்திப்புகளால் டிரம்ப் சோர்வடைந்துவிட்டார். அவர் முடிவைத்தான் எதிர்பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை அல்ல. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார்.

இவ்வாறு கரோலின் லெவிட் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM