குற்றால அருவிகளில் குளிக்க குவியும் ஐயப்ப பக்தர்கள் - வியாபாரிகள் மகிழ்ச்சி
தென்காசி, 13 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது இரண்டாம் கட்ட சீசனாக ஐயப்ப சீசன் துவங்கியுள்ளது. இதனால் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சி
குற்றால அருவிகளில் குளிக்க குவியும் ஐயப்ப பக்தர்கள்


தென்காசி, 13 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது இரண்டாம் கட்ட சீசனாக ஐயப்ப சீசன் துவங்கியுள்ளது.

இதனால் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து ஜில்லென்று வரக்கூடிய தண்ணீரில் குளிப்பதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று (டிச 13) வார விடுமுறையை கொண்டாடிட வரும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்காக அருவிக்கரையில் குவிந்துள்ளனர். இவர்கள் ஜில்லென்று ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் குற்றாலம் பகுதியில் உள்ள கடைகளில் டீ, காபி, தின்பண்டங்கள் விற்பனை களைகட்டியது.

இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

காலையில் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு மாலை நேரங்களில் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் இதனால் ரத வீதி மற்றும் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b