Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் நிர்வாகியான கே.ஆர்.வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2023 ம் ஆண்டு முதல் தற்போது வரை போலீசார் தன்னையும், தமது குடும்பத்தினரையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பதாக கூறி நள்ளிரவு மற்றும் அதிகாலையில் போலீசார் வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கதவையும், ஜன்னல்களையும் போலீசார் உடைப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
போலீசாரின் செயலால் தமது மகன் மற்றும் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் படிப்பில் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே, தனது குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, கே.ஆர்.வெங்கடேஷ் மீது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காவே அவரது வீட்டுக்கு போலீசார் செல்வதாக கூறினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, கே.ஆர்.வெங்கடேஷ், மற்றும் அவரது குடும்பத்தினர் வெவ்வேறு இல்லத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத்தினர் இருக்கும் இல்லத்திற்கு சென்று போலீசார் துன்புறுத்துவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, மனுதாரரின் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam