Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வெளிமாநிலங்களை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லை என்றபோதும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 16 சதவீதம் உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கு நிதியாண்டுகளில் மட்டும் 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், மொத்த மதிப்பு 31.19 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தெரிவித்ததோடு, தனிநபர் வருமான உயர்விலும் தமிழ்நாட்டின் வெற்றி தொடர்கிறது என பெருமிதமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam