Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம் கொண்டது.
இந்த 24 அடிக்கு தண்ணீரை தேக்கும்போது ஏரிக்குள் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி நீர் இருக்கும்.கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக 23.45 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளாவான 24 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி தற்போது நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரிக்குள் 3645 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.
அதோடு ஏரிக்குள் விநாடிக்கு 500 கனஅடி நீர் வருகிறது. இதில் 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது ஏரி முழு கொள்ளவை எட்டிய நிலையில் உள்ளே வரும் 500 கனஅடி நீர் அப்படியே திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது 100 சதவீதம் நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தேக்கி வைத்து சோதனை செய்துள்ளனர்.
எனவே ஏரியின் பாதுகாப்பு சார்ந்து எந்த பயமும் மக்களுக்கு தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b