Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில் நாளை (டிச 14) மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, “I belong to the Dravidian Stock என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாளை திருவண்ணாமலைக்கு வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b