Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச)
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையிலான குழு அறிக்கையை, தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் காரணமாக ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவவிட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ