தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும் 'மைக்ரோ சிப்' கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை
சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச) தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும் ''மைக்ரோ சிப்'' கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும் ''மைக்ரோ சிப்'
Micro


சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும் 'மைக்ரோ சிப்' கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாய்களுக்கு பொருத்தும் 'மைக்ரோ சிப்' கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக மந்தைவெளியைச் சேர்ந்த EXHILAR INNOVATIVE SOLUTIONS என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவின் விசாரணைக்கு வரும் 18ம் தேதிக்குள் தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி கழகம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ