ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் எல்லாம் என்.டி.ஏ. கூட்டணிக்கு வருவார்கள் - ஜி.கே. வாசன்
ஈரோடு, 13 டிசம்பர் (ஹி.ச.) ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்‌. அப்போது அவர் கூறியதாவது, தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளனர். 20ம் தேதி கட்சியை
G.K. Vasan


ஈரோடு, 13 டிசம்பர் (ஹி.ச.)

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்‌.

அப்போது அவர் கூறியதாவது, தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளனர்.

20ம் தேதி கட்சியை இணைக்க உள்ள தமிழருவி மணியனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

திருப்பரங்குன்றம் தீப தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் நாடகத்தை , சிறுபான்மை மக்களை திமுக திசை திருப்புகிறது. நீதிமன்றத்தை திமுக அரசியல் களமாக்க நினைக்கிறது.

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சிக்கிறது. இத டெல்டா மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது தொடர்பாக 30 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணி கட்சிகள் அழுத்தம் தர வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தேர்தல் அரசியலுக்கானது. மக்கள் விழிப்புடன் செயல்பட்டனும் மீண்டும் ஏமாறக்கூடாது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து எதிர்மறை வாக்குகளை பெற்று அடுத்து 5 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை சுருட்ட நினைக்கிறார்கள்

உள்ளாட்சித்துறையில் வெளிப்படை தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் எல்லாம் NDA கூட்டணிக்கு வருவார்கள்.

நல்ல செய்தி விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN