காட்டுப்பன்றிகளால் நாசமாகும் மக்காச்சோளம் - விவசாயிகள் வேதனை
ஈரோடு, 13 டிசம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம், ஆலயங்கரட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). விவசாயி. ஒரு ஏக்கர் நிலத்தில் அதேப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். தற்போது மக்காச்சோளம் நன்கு வளர்ந்து அறுவடைக்கு
Wild Boars


ஈரோடு, 13 டிசம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம், ஆலயங்கரட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). விவசாயி. ஒரு ஏக்கர் நிலத்தில் அதேப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். தற்போது மக்காச்சோளம் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் ஜெயக்குமார் தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

இது குறித்த தகவலின் படி அந்தியூர் வன அதிகாரி ஈஸ்வரமூர்த்தி, ஊழியர்கள் சீனிவாசன் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், மரவள்ளி, கரும்பு பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைகிறது.

அவற்றைக் கட்டுப்படுத்த வனத்தை ஒட்டி அகழி, மின்வேலி அமைக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN