கொல்கத்தாவில் ஸ்டேடியத்தை சூறையாடிய மெஸ்ஸி ரசிகர்கள்
கொல்கத்தா, 13 டிசம்பர் (ஹி.ச.) கொல்கத்தாவில் மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது ரசிகர்கள் ஆவேசமாகி, ஸ்டேடியத்தை சூறையாடினர். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்
மெஸ்ஸி


கொல்கத்தா, 13 டிசம்பர் (ஹி.ச.)

கொல்கத்தாவில் மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது ரசிகர்கள் ஆவேசமாகி, ஸ்டேடியத்தை சூறையாடினர்.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து டிக்கெட் வாங்கியும், மெஸ்ஸியை பிரபலங்களே சூழ்ந்ததால் அவரை காண ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டனர்.

வெறும் 10 நிமிடங்களிலேயே மெஸ்ஸி அங்கிருந்த புறப்பட்டதால், நிகழ்ச்சியை முறையாக ஏற்பாடு செய்யவில்லை என கூறி ஆவேசமான ரசிகர்கள் கிடைத்த பொருட்களை எடுத்து வீசினர்.

அச்சம்பவத்துக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்ததோடு, இது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam