Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
திமுகவின் முதல் மாநாடு 1951 ஆம் ஆண்டில் இதே நாளில் தொடங்கி, தாழ்வு நிறைந்த சமூகத்தின் விடியலாக களமிறங்கினர் நம் திமுக உடன் பிறப்புகள் என்று அமைச்சர் கே.என்.நேரு பெருமிதமாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தேர்தல் அரசியலில் களமாடுவதற்கு முன்பே சமூக நீதிக் களத்தில் போர் புரிந்த நம் திமுகவின் முதல் மாநாடு 1951 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் தொடங்கியது.
இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - எழுச்சியும் அரை நூற்றாண்டுக்கு முன்பே நம் திராவிட முன்னேற்றக் கழகத்தால் விதைக்கப்பட்டது.
நம் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, முன்கள பணியாளர்களாக - கொள்கை வீரர்களாக - ஏற்றத், தாழ்வு நிறைந்த சமூகத்தின் விடியலாக களமிறங்கினர் நம் திமுக உடன் பிறப்புகள்.
தந்தை பெரியாரின் கொள்கை பற்று கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தலைமையில், அண்ணாவின் தம்பியாக நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற முதல் மாநாடு தான் சமூக நீதியை நிலைநாட்டும் திமுகவின் எழுச்சிக்கு முன்னுரை வாசித்தது.
முதல் மாநாட்டிலேயே நம் உடன்பிறப்புகளின் வெற்றி முழக்கத்தில் தொடங்கிய நம் கொள்கை பயணம் நம் கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழியில் நூற்றாண்டை நோக்கி பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்வோம்.
எந்த நிலையிலும் மக்களுக்காகவே இயங்கும் திமுக தான் தமிழ்நாட்டில் இனி என்றும் ஆட்சி அமைக்கும் என்ற நிலையை உறுதி செய்வோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ