Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் வடசென்னை பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் நவீனப்படுத்துதல் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார்.
ஒப்பந்த தேதி முடிவடைந்த பின்னர் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் போடுங்கள் என சேகர்பாபு அறிவுறுத்தல்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது, அமைச்சர் அனுமதி கொடுத்தால் நான் அபராதம் விதிக்க தயார் என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் தெரிவித்தார்.
உரிய காலத்திற்குள் ஒப்பந்த பணிகளை முடிக்காவிட்டால் நீங்கள் அபராதம் விதியுங்கள் என அமைச்சர் சேகர்பாபு டென்ஷனாக சொன்னார்.
விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் கட்டுமான பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது அதிகப்படுத்தி வேலையை விரைந்து முடியுங்கள் என சேகர்பாபு அறிவுறுத்தினார்.
கடந்த 2024 மார்ச் மாதம் 5-ம் தேதி தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் நவீனப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பணி நிறைவடையும் காலம் 2025 மே மாதம் உடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஒப்பந்த காலக்கெடு முடிந்து ஏழு மாதங்கள் கடந்துள்ளது.
ஜனவரி மாதத்திற்குள் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தற்போது அமைச்சர் ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
26.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆர் கே நகரில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு வளாகத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி,
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்தங்கள் முடிக்காத நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது குறித்த கேள்விக்கு,
ஒப்பந்த பணிகள் நடைபெறும் இடத்தில் அமைச்சர் என்கிற முறையில் நானும் துறையின் அதிகாரிகளும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கை சீற்றங்களால் காலதாமதம் ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் புகார் தொடர்பாக ஒரு தரப்பினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,
போராடுவது அவரவர் உரிமை.
உண்ணா விரதத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறோம்.
தமிழகம் சனாதனத்திற்கு எதிரான மாநிலம் என பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு,
சனாதனம் குறித்து பலமுறை பதில் அளித்துள்ளேன்.
சனாதன விவகாரத்தைஅரைத்த மாவையே அரைக்க விரும்பவில்லை
தேர்தலை மனதில் கொண்டு தான் மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு,
அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இது போன்ற திட்டங்களை அறிவித்திருக்கலாமே என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ