வனத்திற்குள் நுழைந்து திருட்டு தனமாக தாது மண் கடத்த முயன்ற 7 பேர் கைது
நீலகிரி, 13 டிசம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகம், ஆரம்பி பிரிவு, முத்தினாடு காவல் பகுதிக்கு உட்பட்ட வென்லாக்டவுன் காப்புகாடு பழைய HPF நிறுவன பகுதியில் வன பகுதியில் உள்ளது. மூடபட்ட HPF நிறுவனத்தில் உள் பகுதியில் தாது மண் உள்ளது.
Arrest


நீலகிரி, 13 டிசம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகம், ஆரம்பி பிரிவு, முத்தினாடு காவல் பகுதிக்கு உட்பட்ட வென்லாக்டவுன் காப்புகாடு பழைய HPF நிறுவன பகுதியில் வன பகுதியில் உள்ளது. மூடபட்ட HPF நிறுவனத்தில் உள் பகுதியில் தாது மண் உள்ளது.

இந்நிலையில் தடை செய்யபட்ட வன பகுதியில் இரவு அத்துமீறி நுழைந்து திருட்டுதனமாக மண் மற்றும் கற்களை உடைத்து திருடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சுரேஷ், அப்பாஸ்,

அருண், பஷீர், சீனி, சிவகுமார்,

மணி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 7 பேரும் உதகையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் அவர்கள் எடுத்து வைத்திருந்த தாது மண்ணையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மாவட்ட வன அலுவலர், நீலகிரி வனகோட்டம் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு வன சட்டம் 1882 - கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN