Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 13 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த 28 வயதாகும் களஞ்சியம் என்பவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். களஞ்சியம் கடந்தசில நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். கடலில் தங்கி மீன்பிடித்த களஞ்சியம் வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் மீனவர் களஞ்சியம் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். மோட்டார் இயங்காததால் மின் ஒயரை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்டபத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே களஞ்சியம் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சேகர்(55) மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். உடைந்து போய் கதறி அழுதனர். இந்நிலையில் மகன் இருந்த துக்கம் தாங்க முடியாமல் சோகத்தில் வீட்டுக்கு சென்ற சேகர், அங்கு தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சேகர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது அவர்களது குடும்பத்தினரை மேலும் மனவேதனை அடைந்தனர். தகவல் அறிந்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா பாலு, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
சேகர், களஞ்சியத்தின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN