சபரிமலையில் இம்மாத இறுதியில் தொடங்கும் ஜனவரி 11 முதல் 19 வரையிலான ஆன்லைன் முன் பதிவு
சபரிமலை, 13 டிசம்பர் (ஹி.ச.) மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ. 16- மாலை திறக்கப்பட்டது. 17-ல் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடக்கிறது. ஒரு சில நாட்களை தவிர்த்தால் மீதி எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இங்கு அலை
சபரிமலையில் இம்மாத இறுதியில் தொடங்கும் ஜனவரி 11 முதல் 19 வரையிலான ஆன்லைன் முன் பதிவு


சபரிமலை, 13 டிசம்பர் (ஹி.ச.)

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ. 16- மாலை திறக்கப்பட்டது.

17-ல் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடக்கிறது. ஒரு சில நாட்களை தவிர்த்தால் மீதி எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது.

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தினமும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையில் டிச. 27 மண்டல பூஜை தினத்தில் 35 ஆயிரம் பேருக்கும், அதற்கு முந்தைய நாள் 26 ல் 30 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் அனுமதி வழங்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரத்திலேயே அனைத்து நேரங்களுக்கான பதிவும் முடிந்துவிட்டது.

தற்போதுள்ள நிலவரப்படி ஜன., 10 வரை முன்பதிவு முடிந்து விட்டது.

இனி ஜன. 11 முதல் ஜன. 19 வரையிலான தரிசன முன்பதிவுக்கான டிக்கெட் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM