சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் வழக்கு - ரூ.66.93 கோடி மதிப்பிலான சொத்துகள் விடுவிப்பு
சென்னை, 13 டிசம்பர் (H.S.) சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களில் 66 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஆக்ஸிஸ் வங்கிக்காக விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில
அமலாக்கத்துறை


சென்னை, 13 டிசம்பர் (H.S.)

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களில் 66 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஆக்ஸிஸ் வங்கிக்காக விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம், தங்களிடம் மோசடி செய்து பணம் பெற்றதாக ஆக்சிஸ் வங்கி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தது. அந்த புகாரில், அந்நிறுவனம் நிதிநிலை அறிக்கைகளை தவறாக காட்டியும், இருப்புகளை உயர்த்திக் காட்டியும், நிபந்தனைகளை மீறி ரூ.118.88 கோடி கடனை மோசடியாகப் பெற்றதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும், நிறுவனம் கடன் தொகையைத் திசை திருப்பி, தவறாகப் பயன்படுத்தி, பல கணக்குகள் மூலம் பெரிய தொகையைச் தவறாக பண பரிவர்த்தனை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆக்சிஸ் வங்கி கடன் தொடர்பாக 2019 அன்று செயல்படாத சொத்துக்களாக மாறின. இதனால் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ. 81.90 கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.74. 04 கோடிரூபாய் மதிப்பிலான 8 அசையா சொத்துக்களை முடக்கினர்.

முடக்கப்பட்ட சொத்துக்களில் 4 சொத்துகளை தங்களுக்கு விடுவிக்கக் கோரி ஆக்சிஸ் வங்கி சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.

இதனை பரிசீலித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வங்கியின் இழப்பைக் கருத்தில் கொண்டு சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ. 66.93 கோடி மதிப்புள்ள 4 அசையாச் சொத்துகளை ஆக்சிஸ் வங்கிக்கு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam