Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 13 டிசம்பர் (ஹி.ச.)
சிவனும் முருகனும் இந்து கடவுளா? தேர்தல் வரும்போது மட்டும் ஏன் முருகன் மேல பக்தி வருது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
அதில்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,
திடீரென முருகன் மீது அக்கறை வந்துள்ளதாக விமர்சித்தார். கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற போராடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர்
தேர்தல் நெருங்குவதால் திருப்பரங்குன்றம் விவகாரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டும் என கூறுபவர்கள் மீனவர்களுக்காக போராடினார்களா? காவிரி உரிமையை மீட்டெடுக்க போராடினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தார்கள் தற்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
தமிழர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.
இந்த விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்க்கவே உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று இவ்வாறு பதிலளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam