Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 13 டிசம்பர் (ஹி.ச.)
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026-ம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 14.12.2025 வரை கால நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவம் 6-ல் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்திட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் (13.12.2025), நாளையும் (14.12.2025) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியான voters.eci.gov.in- மூலம் படிவம் 6-ல் விண்ணப்பம் செய்தும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்சொன்ன முகாம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான படிவம் 6-ஐ வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் இருந்து
பெற்றோ இணையதளம் மூலமாகவோ உடனடியாக பூர்த்தி செய்து அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகுமார்
அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b