Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 டிசம்பர், (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார் ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பாலு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம் 18 வழிகாட்டு நீதிபதிகளின்படி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் 50 பேர் கொண்ட கிராமத்தினர் மட்டும் உண்ணாவிரதம் பந்தலுக்கு வருகை புரிந்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை 18 வழிகாட்டு விதிமுறைகளின் படி உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து
திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
வழக்கறிஞர் பாலு தலைமையில் 11 பெண்கள் உள்பட 50 பேர் கொண்ட கிராம மக்கள் தற்போது மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரத பந்தலின் அருகே ஏராளமான கிராம மக்கள் கூடி உள்ளனர். திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்ரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அரசியல் விமர்சனங்கள் கூடாது உள்ளிட்ட 18 வழிகாட்டு விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam