Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், உக்கடம் பெரிய ஏரி மற்றும் வாலாங்குளம் ஏரியில் சுற்றுச் -சூழலுக்கு பாதிப்பில்லாமல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவிற்கு ஆனைகட்டியில் உள்ள சலீம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்னித்தாலஜி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவை நியமித்துள்ளது
இரண்டு மாதங்களில் அறிக்கை அளிக்கவும் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம், வாலாங்குளம் ஏரிகளில் கூடுகட்டி வசிக்கும் வெளிநாட்டு பறவைகளுக்கும், உள்நாட்டு பறவைகளுக்கும் இடையூறாக ஒலி– ஒளி காட்சிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏரியின் மொத்த பரப்பில் வெறும் 20 சென்ட் பரப்பில் மட்டுமே சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டுள்ளது எனவும்
ஏரியில் லேசர் ஒளி காட்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை எனவும் கோவை மாநகராட்சி விளக்கம் அளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 20 ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ