மதுரை காமராசர் பல்கலைக்கழக 57-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என் ரவி
மதுரை, 13 டிசம்பர்(ஹி.ச.) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 57 ஆம் ஆண்டு பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ தலைவர் ம
Rn ravi


Rn ravi


மதுரை, 13 டிசம்பர்(ஹி.ச.)

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 57 ஆம் ஆண்டு பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் கலந்து கொண்டார். மொத்தம் 354 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா நிறைவுக்குப் பிறகு ஆளுநர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்:

நானும் இந்த இந்த பல்கலை கழக மாணவன். BSC கணிதம் மேக்ஸ் 400 பார்க் வாங்கி MIT யில் இடம் கிடைத்தது.

இங்கு நன்கு நான்கு படுத்த அதனால் தான் இஸ்ரோவில் வேலை கிடைத்து அங்கு சேர்மனாகவும் பணியாற்றி உள்ளேன்.

தமிழ்நாட்டிற்கு கல்வி கண் திறந்த தலைவர் காமராஜர் அவருடைய பெயரில் பல்கலைக்கழகம் அமைந்தது சிறப்பு.

இன்று எனது ஒரு வயது பெட்டி கூட கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள் அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து உடையது தொழில்நுட்பம் வளர வளர நாமும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தால் தான் நாடும் மல இன்று எனது ஒரு வயது பெட்டி கூட கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள் அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து உடையது தொழில்நுட்பம் வளர வளர நாமும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தால் தான் நாடும் வளரும்.

புத்தகப் படிப்பு மட்டும் போதாது நமது நாட்டுக்கு தேவையான சமூக வளர்ச்சிக்கு தேவையானவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் தன்னையும் வளர்த்து நாட்டுக்கு பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை வளர்ச்சி உள்ளது சிறு வயது முதலே புதிய கல்விக் கொள்கையை கற்பதன் மூலம் நாம் பக்குவம் அடைய முடியும்.

கேரளாவில் ஒரு குளத்தில் முதலைகள் இருக்கும் ஆனால் அதற்குள் பத்து சவரன் தங்க சங்கிலியும் இருக்கும் அதை ஒரு பொருள் இறங்கி மற்றொருபுறம் எடுத்துவிட்டு வெளியே வரவேண்டும் என ஒரு போட்டி நடைபெற்றது முதலில் முதலைக்கு பயந்து யாரும் எடுக்கவில்லை. ஒருவர் மட்டும் இந்தப் பக்கம் குதித்து சங்கிலியுடன் இரண்டு பக்கம் எழுந்தார் அனைவரும் அவரை பாராட்டினார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர் கேட்டார் என்னை யார் தள்ளிவிட்டது என்று, அவர் மனைவிதான் அவரை தள்ளி விட்டிருந்தார். நாம் சாதிப்பதற்கு நம்மை யாராவது ஒருவர் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்போது உள்ள மாணவர்கள் படிப்பது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் புதிய கலை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் நாட்டுக்கு உலகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது

60 வருடங்களுக்குமுன்ப புதிய கல்வியறிவு இல்லை.

நமது விண்வெளிக் கொள்கையில் ஏராளமான புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது பிரதமர் மோடியால்,

140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஏன் வில்வெளி துறைக்கு யாரும் வருவதில்லை விண்வெளி துறையில் வேலை வாய்ப்புகள் மற்றும் பல்வேறு பணிகள் காத்திருக்கிறது ஆனால் விண்வெளித் துறைக்கு யாரும் வர ஆர்வம் காட்டப்படவில்லை என்பது உண்மை.

மக்கள் அரசு வேலைக்கு மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் நானும் அரசு வேலை தான் செய்தேன்

பிரதமர் கூறுவதைப் போல படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது வேலைகளை உருவாக்குவார்களாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள் புதிதாக தொடங்கி 5000 வரை கொடுக்க வேண்டும் அப்படி தொழில் தொடங்கும் போது என்னை அழையுங்கள் நான் வந்து அதை திறந்து வைக்கிறேன் என கூறினார்.

Hindusthan Samachar / Durai.J