Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.)
கேரளம் இன்னும் ஒரு காஷ்மீராக மாறும் என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெய்வத்தின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் பரசுராமன் பூமியான கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் நிரம்பி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள் வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் இந்து மலையாளிகள் மட்டுமே உள்ளனர்.
இந்துமலையாளிகள் சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். முஸ்லிம்கள் 27 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் 25 சதவிகிதம் என என முஸ்லிம் கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இந்துக்கள் மலையாளிகள் மட்டுமே கட்சி வாரியாக ஜாதி வாரியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஹிந்து ஒற்றுமை இல்லாத காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கம்யூனிஸ்டுகளாலும் முஸ்லிம் ஜிகாதிகளாலும் கொல்லப்பட்டனர்.
தற்பொழுது சபரிமலை ஐயப்பன் அருளாலும் குருவாயூரப்பன் அருளாலும் இந்து மலையாளிகளுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இந்து மலையாளிகள் விழிப்புணர்வு அடையாவிட்டால் அடுத்த 10 வருடங்களுக்குள்ளாக இந்து மலையாளிகள் தங்களின் அடையாளங்களை இழப்பார்கள்
கேரளம் இன்னும் ஒரு காஷ்மீராக மாறும்
இதுவே நிதர்சனம் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. என்று கூறியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam