Enter your Email Address to subscribe to our newsletters

குவஹாத்தி, 14 டிசம்பர் (ஹி.ச.)
அசாமில் வசிக்கும் வங்கதேசத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு மாநிலத்திலேயே முதல் முறையாக இந்தியக் குடிரியுமை வழங்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட நம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஹிந்து, சீக்கியர், பவுத்தம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இதற்காக, 5 ஆண்டு காலம் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.
இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான அசாமின் சில்சாரைச் சேர்ந்த, 40 வயது வங்கதேச பெண், இந்தியக் குடியுரிமை கேட்டு கடந்தாண்டு விண்ணப்பித்திருந்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சிட்டகாங்க் பகுதியை சேர்ந்த அவர், குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்காக, 2007ல் அசாம் வந்தார். ஸ்ரீபூமி நகரைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து இங்கேயே தங்கிவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்தாண்டு லோக்சபா தேர்தல் தொகுதி மறுவரையறை காரணமாக, இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து குடியுரிமை கேட்டு அவர் சார்பில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போது , அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில், சி.ஏ.ஏ., சட்டத்தின் கீழ், இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
அசாமைச் சேர்ந்த 40 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM