முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை
சேலம், 14 டிசம்பர் (ஹி.ச.) தர்மபுரி மற்றும் திருவண்ணாமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை


சேலம், 14 டிசம்பர் (ஹி.ச.)

தர்மபுரி மற்றும் திருவண்ணாமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

இதையடுத்து அவர் சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் தர்மபுரி மாவட்டத்திற்கு செல்கிறார்.

எனவே, முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM