Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத உயர்கல்வித் துறை, சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக நான்கு சிறுபான்மை கல்லூரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி கடந்த 2023 மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பேரில் இந்த அவமதிப்பு வழக்கின் விசாரணை ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ