கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச) கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனுவுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளி
Cuddalore


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த மனுவுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் கடலுார் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பூங்கா, கடைகள் என, ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வகையில் மைதானத்தை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவிற்கு டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ