இன்று வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
புதுடெல்லி, 14 டிசம்பர் (ஹி.ச.) வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதி
இன்று வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்


புதுடெல்லி, 14 டிசம்பர் (ஹி.ச.)

வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் உரையாற்றவுள்ளனா்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, பொதுச்செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா்.

காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து இத்தலைவா்கள் பேருந்து மூலம் ராம் லீலா மைதானத்துக்குச் சென்று ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனா்.

இது தொடா்பாக கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

வாக்குத் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ராகுல் காந்தி மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இதை அவா் சுட்டிக்காட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவா் செய்தியாளா் சந்திப்பில் விவாதத்துக்கு அழைத்தார். ஆனால் அமித் ஷா அதற்கு தயாராக இல்லை. நாட்டு மக்களுக்கு வாக்குத் திருட்டு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு நாடு முழுவதும் இருந்து வாக்குத் திருட்டுக்கு எதிராக பெறப்பட்ட 5.5 கோடி கையொப்பங்களை சமா்ப்பிக்க குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்கப்பட உள்ளது.

என்றார்.

முன்னதாக தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அமித் ஷா- ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM